Suganthini Ratnam / 2016 ஜனவரி 10 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், எப்.முபாரக்,ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, புல்மோட்டைப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற 120 பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கூரைத்தகரங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வர் நேற்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.
அத்துடன், புல்மோட்டை பிரதேசத்திலுள்ள மொஹிதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு 100 பிளாஸ்டிக் கதிரைகள், சலாமியா மற்றும் நூராணயா பள்ளிவாசல் கட்டட வேலைக்கு 80 ஆயிரம் ரூபாவும் தக்வா பள்ளிவாசல் கட்டட வேலைக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்கி வைத்தார்.
ஆர்.எம்.அன்வரின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவை வழங்கப்பட்டன.
9 minute ago
17 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
26 minute ago
38 minute ago