2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உத்தியோகத்தரை தாக்கியவருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2018 மார்ச் 15 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திய சந்தேகநபரை, இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

கோமரங்கடவெல, பன்சலவெவ பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், கோமரங்கடவெல பகுதியில் கடமையின் நிமித்தம் சென்ற புலனாய்வு உத்தியோகத்தரைத் தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கியும் காயப்படுத்திய குற்றச்சாட்டில், கோமரங்கடவல பொலிஸாரால்  செவ்வாய்கிழமை (13) இரவு கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X