2025 ஜூலை 26, சனிக்கிழமை

உயிரிழந்த மாணவர்களுக்காக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில்  செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

திருகோணமலை நகரசபைக்கு முன்னால் இருந்து புறப்பட்ட இந்தக் கண்டனப் பேரணியானது, திருகோணமலை மத்திய பஸ் நிலையத்தை வந்தடைந்து, பஸ் நிலையத்தின்  முன்னால் உள்ள சுற்றுவட்டத்தில் உள்ள மூன்று பிரதான பாதைகளை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒன்றரை மணித்தியலம் இடம்பெற்ற இந்த வீதி மறியல் போராட்டம் காரணமாக, மத்திய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களும், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பஸ்களும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X