2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

Editorial   / 2020 மே 17 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டிக்குளம் பிரதேசத்தில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞனொருவர், உள்ளூர் துப்பாக்கியுடன், இன்று (17)  கைது செய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.  

உள்ளூர் துப்பாக்கியைப் பயன்படுத்தி, மிருகங்களை வேட்டையாடி வருவதாக  பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, இவர் தொடர்பில் பொலிஸார்  கவனம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், இவர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடுவதற்காக காட்டுப் பகுதிக்குச் செல்லும் போது,  இவரை கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தொடர்பில் முன் குற்றங்கள்  ஏதாவது இருக்கின்றனவா என விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, கோமரங்கடவல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X