Niroshini / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
“கலைத்துறையில் கற்கின்ற மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்காக தேசிய ரீதியில் பலத்த போட்டியை எதிர்நோக்குவதால், அத்துறையில் கற்கின்ற மாணவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடங்களை தெரிவு செய்வதன் மூலம் இலகுவாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறமுடியும்” என கிண்ணியா வலயக்கல்வி அலுவலக உளவள ஆலோசனை வழிகாட்டல் அதிகாரி அமான் ஹபீப் தெரிவித்தார்.
இவ்வருடம் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தர கலை மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான பாடத் தெரிவு சம்பந்தமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு செயலமர்வு, நேற்று கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் அதிபர் திருமதி என்.எஸ்.அமீன்வாரி தலைமையில் நடைபெற்றது. அதில் வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று கலைத்துறைக்கான பல்கலைக்கழக அனுமதி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கலைத் துறையில் கற்கின்ற மாணவன் ஒருவன் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றாலும் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவது என்பது கடினமான பணியாக மாறியிருக்கிறது.
பல்கலைக்கழகங்களில் கலைத் துறையில் பல புதிய கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தொடருவதற்கு உயர்தரப் பிரிவில் அறிமுகப்படத்தப்பட்டுள்ள புதிய பாடங்களை தெரிவு செய்வதன் மூலம் பல்கலைக்கழகத்துக்கு இலகுவாகத் தகுதி பெறமுடியும்.
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த வரையில் புவியல், இஸ்லாம், தமிழ், அரசியல் போன்ற பாடங்களை கற்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இஸட் புள்ளியை அதிகரிப்பதில் மாணவர்கள் பலத்த சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், இப் பாடசாலையில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊடகக் கல்வி பாடமானது இஸட் புள்ளியை அதிகரிப்பதற்கு உங்களுக்கு வசதியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமலை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் இதுவரை இப்பாடம் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனவே, முதலாவது இப்பாடசாலையில் இருந்து அறிமுகமாவது பெருமைக்குரிய விடயமாகும். இதன் மூலம் கலைத்துறையில் அதிகமான மாணவர்களை இங்கிருந்து பல்கலைக்கழகம் அனுப்ப முடியும்.
தொழில்நுட்பத் துறையில் கற்கின்ற மாணவர்களும் ஊடகக் கல்வியை ஒரு பாடமாக எடுத்து பல்கலைக்கழகத் தகுதியை இலகுவாகப் பெற முடியும். தொழில்நுட்பத் துறைக்கான பல்கலைக்கழக அனுமதி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் ஊடகத்துறை என்பது ஒரு சமூகத்தின் இருப்புக்கு அவசியமானதொரு துறையாக மாறிவருகின்றது. துரஸ்டவசமாக முஸ்லிம் சமூகத்தில் இதனுடைய முக்கியத்துவம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்” என்றார்.
6 minute ago
18 minute ago
23 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
23 minute ago
31 minute ago