Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், தாக்குதலாளிகளின் பயிற்சி முகாமாக செயற்படவிருந்த திருகோணமலை மாவட்டத்தின் இரு இடங்கள் மீது, இம்மாதம் 24, 25ஆம் திகதிகளில் குற்றத்தடுப்புப் பிரிவினர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாவனல்ல புத்தர் சிலை உடைப்புச் சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் உள்ள நபரொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பயிற்சி முகாம்கள் சம்பந்தமான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகரிலுள்ள 12 ஏக்கர் காணியிலும் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹிப் நகரிலுள்ள 6 ஏக்கர் காணியிலும் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்பால் நகரில் அடையாளம் உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனையாகவும் தாஹிப் நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை, ஆயதங்கள் தொடர்பான தேடலாகவும் அமைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. எனினும், ஆயுதங்கள் எவையும் அங்கு கைப்பற்றப்படவில்லை.
இவை குறித்த தொடர் விசாரணைகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago