2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏல விற்பனைக்கு வந்த வர்த்தகரை காணவில்லை

George   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை பிரதேசத்தில் அரச வங்கியொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏல விற்பனை ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்றது.

குறித்த ஏல விற்பனையில் நகைகளை வாங்குவதற்காக வந்த நபரை காணவில்லையென திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை, அட்டுலகம சேர்ந்த எம்.எச்.நஸ்ரின் (36 வயது) என்ற நபரே காணாமல் போயுள்ளார்.

அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலையிலுள்ள வங்கிக்கு ஏல விற்பனையில் நகைகளை பெற்றுக்கொள்வதற்காக வந்த குறித்த நபர், தண்ணீர் குடிப்பதற்காக வங்கிக்கு வெளியே சென்றுள்ளார்.

எனினும், சென்றவர் திரும்பி வரவில்லை எனவும் அவரிடம் 20 இலட்சம் ரூபாய் பணம்  இருந்ததாகவும் அவருடன் வந்த நபர், பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராவை சோதனை செய்த பொலிஸார், மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X