Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
நாட்டில் இன ஐக்கியத்தைச் சீர்குலைப்பதற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தும் இன ஐக்கியத்தைச் சீர் குழைப்பவர்களை இவரை ஏன் கைது செய்யவில்லையென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கேள்வியெழுப்பினார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்று, கிண்ணியாவில் இன்று (13) நடத்தியபோதே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
இரண்டு வார காலமாக மீண்டும் இந்த நாட்டின் இனவாதிகளின் இனவாதப் பேச்சுக்கள் மேலோங்கி இருப்பதை காணக்கூடியதாகத் தெரிவித்த அவர், பொதுஜன பெரமுனவினுடைய சில அரசியல்வாதிகள், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இனவாதக் கருத்துகளை முன்வைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, சில பௌத்த தேரர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பல இனவாதக் கருத்துகளை முன்வைத்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
எனவே, நாட்டில் இன ஐக்கியத்தைச் சீர்குலைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .