2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஐந்து பொலிஸ் நிலையங்களில் 13 பேர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் 5 பொலிஸ் நிலையங்களில் பிடிவிராந்து பிடிக்கப்பட்டுள் 13 சந்தேக நபர்கள், இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச்செயல்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெறுகின்ற  நிலையில், குறித்த வழக்குகளுக்கு சமுகமளிக்காமல்  தலைமறைவாக இருந்த நிலையில்,  இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தில் 2 சந்தேகநபர்களும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் 6 சந்தேகநபர்களும், மொரவெவ பொலிஸ் நிலையத்தில் ஒரு சந்தேக நபரும், உப்புவெளி மற்றும் சீனக்குடா பொலிஸ் நிலையங்களில் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேகநபர்களை, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் இன்றையதினம் ஆஜர்படுத்திய போது, அவர்களை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், மேற்படி சந்தேக நபர்களின் குற்றச் செயல்கள் தொடர்பில், அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான், பொலிஸாருக்குக் கட்டளையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X