Princiya Dixci / 2016 மார்ச் 16 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலையில் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திய இருவரை, இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா, இன்று புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.
திருகோணமலை, ஆனந்தபுரிப் பகுதியைச் சேர்ந்த இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பழைய குரோதத்தின் காரணமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பற்றிக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) மாலை அவர்களைக் கைதுசெய்து இன்று (16) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago