2025 மே 14, புதன்கிழமை

ஒரு தொகை சிப்பிகளுடன் லொறியின் சாரதி கைது

தீஷான் அஹமட்   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் வைத்து லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை சிப்பிகளை,  நேற்றுக் கைப்பற்றியுள்ளதோடு, குறித்த லொறியின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

அனுமதிப்பத்திரமின்றி லொறியில் சிப்பிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக, பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி சிப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதுடன், மேற்குறிப்பிட்ட சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், திருகோணமலை நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .