Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றமீஸ்
சகல மாவட்டங்களிலும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நலன்புரி, ஏனைய சேவைகளை ஒருங்கிணைப்புச் செய்யவும் இலகுபடுத்துவதற்காகவும் பொது நிர்வாக அமைச்சு, ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது.
அதற்கமைவாக திருகோணமலை மாவட்டத்துக்கு, வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவை, மாவட்ட செயலகத்தில், நேற்று (15) சந்தித்ததுடன் அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகள், அத்தியவசிய சேவைகள் உட்பட பல விடயங்களை இதன்போது கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ், மாவட்ட உதவ அரசாங்க அதிபர் என்.பிரதீபன் உட்பட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025