Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2020 மார்ச் 18 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் வாய்க்காலில் ஓட்டோவொன்று, இன்று (18) காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கடற்படை வீரரொருவர் படுகாயடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சேருநுவர பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார (வயது 35) எனும் கடற்படை வீரரே காயமடைந்துள்ளார்.
குறித்த கடற்படை வீரர், சேருநுவர பகுதியிலிருந்து மூதூர் நோக்கி ஓட்டோவில் பயணித்த போது, வீதியை விட்டு விலகிய ஓட்டோ, வாய்க்காலில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago