2025 மே 17, சனிக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Thipaan   / 2016 நவம்பர் 06 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்தின், கிண்ணியா காக்கா முனை 7ஆம் வட்டார பகுதியிலுள்ள வீடொன்றில் தோண்டப்பட்ட குழியிலிருந்து கைக்குண்டொன்றை மீட்டு, செயலிழக்கச் செய்ததாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டின் முன்பகுதியில் அத்திபாரம் இடுவதற்காகக் குழி தோண்டியபோது, கைக்குண்டு  தென்பட்டதையடுத்து கிண்ணியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டு, இரவு 7.30 மணியளவில் கிண்ணியா உப்பாறு பாலத்துக்கு அருகாமையில் வைத்து செயலிழக்கச் செய்தனர்.

இக்கைக்குண்டு விடுதலை புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டாக இருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .