Suganthini Ratnam / 2017 மே 17 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ரொட்டவெவ பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்ற கைகலப்பில் படுகாயமடைந்த 9 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அயல் வீடுகளைச் சேர்ந்தோருக்கிடையில் ஏற்கெனவே முரண்பாடு இருந்துவந்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் தாக்குதலுக்குள்ளானார். இதனை அடுத்து ஏற்பட்ட கைகலப்பில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 9 பேரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடனர். இவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
25 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
3 hours ago