Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை -அபயபுர சிங்கள மகா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுபோட்டிக்காக நிர்மாணிக்கப்பட்ட கூடாரத்துக்கு தீ வைத்த பாடசாலையின் பழைய மாணவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (07) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி உத்தரவிட்டார்.
திருகோணமலை, லவ்லேன் பகுதியைச் சேர்ந்த சிஹான் கான்சக (வயது 19) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அபயபுர சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மூன்று கழகங்களுக்கும் கூடாரங்கள் அமைக்கப்படிருந்தன. அதில் ஒரு கூடாரத்தை அதே பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர் தீ வைத்துள்ளமை தெரியவந்ததையடுத்து, பாடசாலை அதிபரினால் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
விசாரணைகளை மேற்கொண்ட தலைமையக பொலிஸார் குறித்த மாணவனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago