Niroshini / 2016 மார்ச் 07 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனமும் கிண்ணியா எபேர்ட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த, போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை கிண்ணியா மத்திய பள்ளிவாயலில் நடைபெற்றது.
கிண்ணியா வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், கிண்ணியாவில் ஜூம் ஆ பள்ளி வாயல்களில் ஜூம் ஆ பிரசாங்கம் நடத்தும் கதீப்மார்கள், கிழக்கு மாகாண சட்ட அதிகாரி சட்டத் தரணி ஏ.எம்.அனிபு லெப்பை, மாவட்ட செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை உள்ள முஸ்லிம்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
போதைப் பொருள் பாவனை முஸ்லிம்கள் சமூகத்திலிருந்து அகற்றுதல் தொடர்பாக கருத்துப் பறிமாற்றங்கள் இடம்பெற்றன.



10 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
26 minute ago