2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கிண்ணியாவில் கைம்பெண் கொலை

Suganthini Ratnam   / 2016 மே 16 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், தீசான் அஹமட்,பதுர்தீன் சியானா

திருகோணமலை, கிண்ணியாப் பிரதேசத்தில்; கைம்பெண் ஒருவர் வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர் அணிதிருந்த தங்க வளையல்களும் தங்கச்சங்கிலியும் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பணமும் திருட்டுப் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

இரண்டு பிள்ளைகளின் தாயான முகம்மது இஸ்மாயில் ஹாஜரா (வயது 65) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

றஹ்மானியா வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் தனிமையில் வசித்துவந்த இவர், வீட்டின் முன்பக்கத்தில் சிறிய பலசரக்குக் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். வழமை போன்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு ஒன்பது மணிக்கு தனது கடையை பூட்டிவிட்டு உறங்குவதற்குச் சென்ற இவர், இன்று திங்கட்கிழமை காலை ஒன்பது மணியாகியும் கடையைத் திறக்கவில்லை.  

இந்நிலையில், பக்கத்து வீட்டிலிருந்த இவரது பேத்திகள் இவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் வாய், கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக்  கிடந்துள்ளதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

திருடும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள கிண்ணியா பொலிஸார், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X