Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 24 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
கடந்தகால யுத்த சூழ்நிலையின் போது மூதூர் தெற்கு பகுதியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்துக்கும் மூதூர் பிரஜைகள் குழுவுக்குமிடையிலான சந்திப்பு, சிவசிறி இ.பாஸ்க்கரன் குருக்களின் தலைமையில் மாலை மூதூர் பிரஜைகள் குழுவின் காரியாலய வளாகத்தில், நேற்று (23) இடம்பெற்றது.
இச்சந்திப்பில் மூதூர் தெற்கு பகுதியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கும் போது, எங்களது உறவுகளை இழந்து, தினம் தினம் அழுகையில் கழித்து வருகின்றோம். எனவே இது விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் கரிசணை செலுத்தி எங்களது உறவுகளை மீட்டுத்தர ஆவண செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
அதேவேளை, இச்சந்திப்பில் கலந்து கொண்டோர் கூட்டாக இணைந்து எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை மூதூர் பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினை கையளிப்பதாகவும் தீர்மானம் செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .