2026 மார்ச் 23, திங்கட்கிழமை

காதலியை தாக்கியவர் விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்               

திருகோணமலையில் மதுபானம் அருந்திவிட்டு காதலன் காதலியைத் தாக்கி காயமேற்படுத்திய ஒருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று வியாழக்கிழமை (7) உத்தரவிட்டுள்ளார்.                           

திருகோணமலை சுகதகம பகுதியைச் சேர்ந்த கே.பி.தாரக்க கசுன் வயது(26)என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                          

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியின் நீண்டகாலமாக காதலித்து வந்த பெண்ணொருவரை சாரயம் குடித்து விட்டு குறித்த பெண்ணின் வீட்டுக்குச் புதன் கிழமை (6)இரவு சென்று தாக்கி காயமேற்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.       

குறித்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப் பெண் வேறு ஒரு நபரை காதலித்து வருவதாக அறிந்த ஆத்திரத்தில் காதலன் தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                          

குறித்த சந்தேக நபரை பொலிஸார் புதன்கிழமை(60) இரவு கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .