Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில், காய்ச்சல் காரணமாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்கள் இருவர், இன்று (03) உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
துறைமுக பொலிஸ் எல்லைக்குட்பட்ட திருகோணமலை - மின்சார நிலைய வீதி இலக்கம் 421 வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான வீ,ராஜலக்மி (35 வயது) என்பவர், காய்ச்சலுடன் கூடிய சளி காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி - அரியமன் கேணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த பாபு லெட்சுமி (32 வயது), காய்ச்சல் மற்றும் தொய்வு காரணமாக, மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இருவரினதும் சடலங்களை, சட்ட வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்தியதாகவும் அதில் திருகோணமலையைச் சேர்ந்த வீ.ராஜலக்மி, நிமோனியாவினால் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய பெண், வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஜே.சி.சமரவீர தெரிவித்தார்.
தற்போது, நாட்டில் டெங்கு மற்றும் எச்1என்1 வைரஸ் பரவி வருவதினால், உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு, எம்.ஆர்.ஜ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கவுள்ளதாகவும், சட்ட வைத்திய நிபுணர் ஜே.சி.சமரவீர மேலும் தெரிவித்தார்.
11 minute ago
32 minute ago
41 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
41 minute ago
41 minute ago