2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கியூப தூதுவர் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சந்திப்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கியூபாவின் தூதுவர் புளோடிரென்டினோ படிஸ்ரா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, நிலாவெளி ஹோட்டல் பார்ம் வில்லேஜில், நேற்று சனிக்கிழமை (10) 05.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது, திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, மாவட்டத்தில் வாழ்கின்ற வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாகவும் தூதுவரிடம் எடுத்து கூறியதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இதற்கு தூதுவர், தாம் மாவட்டத்தின் சுகாதார உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் அதற்காகவே, மாவட்டத்தை தாம் நேரில் பார்வையிடுவதற்காகவே வருகை தந்தாகவும் குறித்த மக்களுக்கு செய்யவேண்டிய அனைத்தும் தம்மால் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதுபோன்றுதான் தமது நாடு சர்வதேச ரீதியில் உதவி வருவதாகவும் குறிப்பாக சிரியாவுக்கான  மருத்துவ உதவிகளை அதிகளவில் செய்து வருவதாகவும் தூதுவர், தன்னிடம் தெரிவித்ததாக மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X