2025 மே 19, திங்கட்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து முந்நூறு மில்லி கிராம் கேரளாக் கஞ்சாவுடன் ஒருவரை நேற்று புதன்கிழமை (03) மாலை 6.30 மணியளவில் கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பெரியாற்றுமுனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கஞ்சா வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே,அவரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு எதிராக,ஏற்கெனவே கஞ்சா வைத்திருந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த பொலிஸார், அவரை இன்று வியாழக்கிழமை (04) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X