Princiya Dixci / 2016 ஜூலை 07 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, வான்எலப் பிரதேசத்தில் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒருவரை, நேற்று புதன்கிழமை (06) கைதுசெய்துள்ளதாக ஜயந்திபுரப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேருவிலப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரேயே கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர், வான்எலப் பகுதியிலிருந்து சேருவிலவுக்கு மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவைக் கொண்டு சென்ற போதே சூரியபுரப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி சோதனை மேற்கொண்டு கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சூரியபுரப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
9 hours ago