2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

குளிக்க சென்றவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2017 மே 13 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை நகர சபைக்கருகிலுள்ள கடற்கரைக்கு குளிக்கச் சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான டி.சிறி ராஷா (52 வயது) என்பவர், நேற்று மாலை 6 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நீரிழ் மூழ்கிய நிலையில், பொலிஸ் உயிர் காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, இந்நபர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து வருகை தந்திருந்த நண்பர்களுடன், கடலுக்குக் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X