2026 மார்ச் 23, திங்கட்கிழமை

குளவிக்கொட்டில் 4 பேர் பாதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 13 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, தெவனிபியவரப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான  சிறுவன் ஒருவன் உட்பட நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெவனிபியவரப் பகுதியைச் சேர்ந்தவர்களான சாமர மதுசங்க (வயது 03), வை.சுனீதா குமாரி (வயது 25) எம்.எம்.சஞ்சீவ (வயது 32), டபிள்யூ.திலகாவத்தி (வயது 27) ஆகியோரே குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

விஜய பாலர் பாடசாலையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த குளவிக் கூடு கலைந்த நிலையில் அதிலிருந்த குளவிகள் இவர்களை கொட்டியுள்ளது.   

உடனடியாக மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள்,  மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .