2025 ஜூலை 26, சனிக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபரொருவர், குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் நேற்றுப் புதன்கிழமை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, இன்று (27) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், திருகோணமலை- மிகிந்தபுரம் 02ஆம் ஒழுங்கையில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சாதிகீன் அப்துல் கபூர் (வயது 69) எனத் தெரியவருகின்றது.

சடலம், வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை, உப்புவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X