2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வைத்தியசாலையில்

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை கெமுனுபுர பகுதியில் தேசிய இளைஞர் படையணி பயிற்சி முகாம் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட ஐவர், குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திசாலை தகவல்கள்; தெரிவிக்கின்றன.

நிந்தவூர் மீராநகர் பகுதியைச் சேர்ந்தவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். கெமுனுபுர பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடத்துக்கருகில் இருந்த குளவிக் கூடு, கலைந்தமையினாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய ஐவரும் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X