2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Niroshini   / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்

கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி ஒத்திவைத்த திருகோணமலை மாவட்ட நீதிமன்றம், இதற்கு ஆயத்தமாக வருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தையும் வழக்காளியையும்  பணித்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை  வளாகத்தின்  2008ஆம் ஆண்டு  ஆரம்பத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்களுக்கான ஒப்பந்த நிதி  ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படாமைக்கு ​எதிராக  திருகோணமலையைச் சேர்ந்த  கட்டிட ஒப்பந்த நிறுவனமான றோயல் கொன்க்றக்ஷன் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை கடந்த 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நீதவான் எம். அப்துல்லா, இந்த வழக்கின் விசாரணை வரும் 31ஆம் திகதி ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.

2008ஆம் ஆண்டு  கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில்  நான்கு கட்டிடத்தொகுதிகளை சுமார் 25 மில்லியன் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து பணியை முறைப்படி முடித்தபோதும், இன்னும் 10 மில்லியன் ரூபாய் நிர்வாகத்திடமிருந்து வரவேண்டியுள்ளதாகவும் அவை இன்னும் வழங்கப்படவில்லை எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X