Kogilavani / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
'கிழக்கு மாகாணம் பல இனங்களையும் பல மொழி பேசுகின்ற மக்களையும் பல கலாசாரங்களையும் கொண்டதோடு நாட்டுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றது' என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பன்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பன்மைத்துவ கலாசார நிகழ்வு செவ்வாய்;கிழமை(29)திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், கிழக்கு மாகாண மக்கள் நிம்மதியாகவும் சந்தோசத்துடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் இதனை சிறப்புர மேம்படுத்த இலங்கையின் சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் பிரதமரும் ,பாடுபட்டு வருகின்றார்கள்.
மாகாணத்திலுள்ள நிர்வாக அதிகாரிகள், முழுமையான சேவையை வழங்குகின்ற போதுதான் கிழக்கு மாகாணம் வினைத்திறன்மிக்க சேவையாக மாறும் எனவேதான் உங்களை எமது மாகாணம் எதிர்பார்த்து நிற்கின்றது' என்றார்.
12 minute ago
20 minute ago
29 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
29 minute ago
41 minute ago