2026 மார்ச் 21, சனிக்கிழமை

கசிப்புடன் கைதானவருக்கு தண்டம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 750 மில்லிலீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டவருக்கு  5,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஷ்வானந்த பெர்ணான்டோ, நேற்று (11)  உத்தரவிட்டார்.

நாமல்வத்தை  பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவருக்கே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்று வருவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து, பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் திருட்டுத் தனமாக விற்பனை செய்து கொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X