2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கசிப்பு வடித்த இருவருக்கு பொலிஸ் பிணை

Thipaan   / 2016 ஜூன் 13 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, சேருநுவர காட்டுப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடித்த இரண்டு பேரைப் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

மக்கள் நடமாட்டமில்லாத இடத்தில் கசிப்பு வடித்து, குறைந்த விலையில் கிராமங்களில் விற்பனை செய்து வருவதாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சந்தேகநபர்களை பொலிஸார்  பின் தொடர்ந்த வேளை, அவர்கள் காட்டுப்பகுதிக்குள் செல்வதை அவதானித்த பொலிஸார் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதுடன், கேன்கள், சீனி, பேரீச்சம்பழம் மற்றும் கசிப்பு வடிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், சேருநுவர, மகிந்தபுர பகுதியைச்சேர்ந்த பீ.சுமதிபால (52 வயது) மற்றும் ஏ.பிரேமரத்ன (56 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X