2025 மே 05, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடுவூற்று, மகாவலி கங்கைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த 28, 32 வயதுகளையுடைய இருவரை, இன்று(24) அதிகாலை கைதுசெய்துள்ளதாக, கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர். 

கிண்ணியா, ஆலங்கேணி பகுதியை சேர்ந்த சந்தேகநபர்களையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மகாவலி, நடுவூற்று காட்டுப்பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களை கைது செய்து சோதனையிட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 480 போடா போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளார் எதிர்வரும் புதன்கிழமை திருகோணமலை நீதிமன்றில் ஆஜராகுமாறு கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X