2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கசிப்பு காய்ச்சிய சந்தேகநபர் கைது

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர், சந்தனவெட்டை காட்டுப்பகுதியில் கசிப்பு காய்ச்சிய சந்தேகநபர் ஒருவரை, சம்பூர் பொலிஸார் நேற்று(24) கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் வேலாயுதம் காசிராசா என்ற 46 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டதாக, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதன்போது, 03 தகர பறல்கள், கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா 6, 6 இலட்சத்து15 ஆயிரத்து 750 மில்லி லீற்றர் கசிப்பு ஆகியன கைப்பற்றப்பட்டது. இந்தக் கசிப்பு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X