2025 மே 14, புதன்கிழமை

கசிப்பு தயாரிக்கும் பொருட்களுடன் ஒருவர் கைது

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஜூலை 01 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா, ஆலங்கேணி காட்டுப் பகுதியில் கசிப்பு காச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பெருந் தொகையான பொருட்களுடன் ஒருவர், நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேபகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து சுமார் 7 பரல் கோடாவும்  கசிப்பு காய்ச்சுவதக்குப்  பயன்படுத்தப்படும்  5 இலட்சத்துக்கும் அதிமான பொருட்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பேரிலேயே இச்சுற்றி வளைப்பு இடம்பெற்ற வேளையில்,
சம்பந்தப்பட்ட இடத்துக்கு வருகை தந்த போது, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர், திருகோணமலை தலைமையாகப் பொலிஸில் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டதாகவும் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .