Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, பைஷால் நகர் "பாரதி புரம்" பகுதியில் இடம்பெற்ற திடீர் சுற்றி வளைப்பில், விற்பனைக்குத் தயார் நிலையில் கசிப்பை வைத்திருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இன்று (07) அதிகாலை 12.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டார்.
20 வயதுடைய இக் குடும்பஸ்தரிடமிருந்து 33 லீற்றரும் 750 மில்லி லீற்றரும் கொண்ட கசிப்பு கன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவல் ஒன்றில் அடிப்படையிலேயே, இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேகநபர், கிண்ணியா பொலிஸில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
04 Jul 2025