2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கஞ்சா கலந்த சிகரெட்களை விற்பனை செய்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூன் 06 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எப்.முபாரக்                     

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் கஞ்சா கலந்த சிகரெட்களை விற்பனை செய்தவரை, இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று திங்கட்கிழமை (06) உத்தரவிட்டார்.  

சந்தேகநபர், 38 வயதானவர் எனவும் அவர் கந்தளாய் - ஜயந்திபுரப் பகுதியில் சிறியகடையொன்றை நடத்தி வந்துள்ளார்.

குறித்த நபர், கஞ்சா கலந்த சிகரெட்களை  விற்பனை செய்வதாக சூரியபுர பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையிலேயே சந்தேகநபரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

சந்தேகநபரை, இன்று திங்கட்கிழமை (06) கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X