Suganthini Ratnam / 2016 ஜனவரி 05 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, ஜயந்திபுரப் பகுதியிலுள்ள வீட்டு வளவொன்றில் கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 55 வயதுடைய அவ்வீட்டு உரிமையாளரை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவன் திஸாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
வீட்டு முற்றத்தில் பூச்செடிகளுடன் மூன்று கஞ்சாச் செடிகளை வளர்த்து வருகின்றமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போது, பூச்செடிகளுடன் கஞ்சாச் செடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேக நபரையும் திங்கட்கிழமை (04) மாலை பொலிஸார் கைதுசெய்தனர்.
இந்தச் சந்தேக நபர் கஞ்சாப் பாவனைக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
20 minute ago
29 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
29 minute ago
41 minute ago