Thipaan / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் 16 கிராம் கஞ்சாவுடன் ஏழு பேரைக் கைதுசெய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸாருக்கு, செவ்வாய்க்கிழமை (04) இரவு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கிண்ணியா, புதுக்குடியிருப்பு பகுதியில் பாவனைக்காக வைத்திருந்த கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து 14 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோன்று, கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியில் பாவனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடமிருந்து 2 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இவர்கள் எழுவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026