Thipaan / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் 500 கிராம் கேரளா கஞ்சாவை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவரை, அடுத்தமாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) உத்தரவிட்டார்.
கந்தளாய், 92 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக கந்தளாய் பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும் கஞ்சா வைத்திருப்பதாகவும், கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (24) சந்தேகநபர், கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை பொலிஸார் கந்தளாய் நீதமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
8 hours ago
8 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
20 Mar 2026