Thipaan / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 400 மில்லி கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவருக்கு எட்டாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) உத்தரவிட்டார்.
முள்ளிப்பொத்தானைப், சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்தநபர், கந்தளாய் பிரதேசத்தில் 400 மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்து உலாவிய வேளையில், கந்தளாய் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (01) மாலையில் அவரைக் கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தபரை, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே எட்டாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026