Niroshini / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, புல்மோட்டை, கொக்கிளாய் பகுதியில் தம்வசம், 389 மில்லி கிராம் கஞ்சாவை வைத்திருந்தவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதிவான் ஹயான் மீ ஹககே திங்கட்கிழமை (28)உத்தரவிட்டார்.
முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த அப்துல் ரவூப் (வயது 48)என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் பகுதியில் குறித்த சந்தேக நபர் 389 மில்லி கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தபோதே பொலிஸார் குறித்த நபரை ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் கொக்கிளாய் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு நீண்டகாலமாக கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
11 minute ago
19 minute ago
28 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
28 minute ago
40 minute ago