Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்தளாய், சீனித் தொழிற்சாலைக்குப் பின்புறமாகவுள்ள வீடொன்றில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சாச் செடிகளை வளர்த்த, அவ்வீட்டின் உரிமையாளர், இன்று (14) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
கன்தளாய், அக்போபுர, 85ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த எஸ்.அமரசிங்க (45 வயது) எனபவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கன்தளாய் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அவ்வீட்டுக்குப் பின்புறமாக உள்ள பகுதியை சோதனை செய்த போது, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சாச் செடிகள் நாட்டப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளரை கைதுசெய்துள்ளதாகவும் கன்தளாய் நீதிமன்றத்தில் நாளை (15) ஆஐர்படுத்தவுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
3 hours ago
3 hours ago