2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கடற்கொந்தளிப்பினால் 2 படகுகளும் 3 தோணிகளும் சேதம்

Thipaan   / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் கடற்கரைப்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (06) இரவு ஏற்பட்ட கடற்கொந்தளிப்பினால், கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 படகுகளும் 3 தோணிகளும் சேதமாகியுள்ளன.

படகுகளின் ஒவ்வொரு பாகங்களும் வௌ;வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்துக்;கு இன்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்த மூதூர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், படகுகள், தோணிகளின் இழப்பீடுகள் சம்ந்தமான தரவுகளைப் பெற்றுக் கொண்டனர்.

அதேவேளை இரண்டு படகுகளும் காப்புறுதி செய்யப்பட்டிருந்ததுடன், அந்த நிறுவன அதிகாரிகளும் சேத விவரங்களைச் சேகரித்துச் செனறனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X