Princiya Dixci / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எம்.ஏ.பரீத்
மூதூர் பிரதேசத்திலுள்ள ஹபீப் நகர் மற்றும் தக்வா நகர் ஆகிய கிராமங்களை இணைத்துச்செல்லும் கரையோர வீதியானது கடல் சீற்றத்தினால் பாதிப்படைந்துள்ளது.
கடல் பரப்பில் கல்வேலி அமைக்கும் பணியின் ஒரு கட்டம் நிறைடைந்துள்ள நிலையிலேயே இவ்வீதியானது பாதிப்படைந்துள்ளது.
குறித்த பகுதியில் கடலரிப்பு கூடுதலாக இடம்பெற்று வந்ததனால் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் கல்வேலி அமைப்பதில் அப்பகுதியை முன்னுரிமைப்படுத்துமாறு குறித்த பகுதி மக்களும் சமூக அமைப்புக்களும் சுட்டிக்காட்டிய போதும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் அதனைக் கவனத்தில் எடுக்கவில்லையென மக்கள் விசனம் தெரிவித்தனர்.
வீதி பாதிப்படைந்ததைத் தொடர்ந்து இதனூடாக இடம்பெற்றுவந்த வாகனப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வீதியைப் பயன்டுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

9 minute ago
17 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
26 minute ago
38 minute ago