2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கடற்கரையோரங்கள் சுத்தமாகின

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையும் டெல் நிறுவனமும் இணைந்து, திருகோணமலை கடற்கரையோரம்களை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திருகோணமலை  நகர சபைக்குட்பட்ட பத்தாம் குறிச்சி பகுதியிலுள்ள கடற்கரையோரங்களை துப்புரவு செய்து, அதில் காணப்படுகின்ற பிளாஸ்டிக், பொலித்தீன், கழிவுப் பொருள்களை அகற்றும் பணியில், கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையில் கடமையாற்றும் ஊழியர்கள், டெல் நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களும் இன்று (12) ஈடுபட்டனர்.

“உலகளாவிய ரீதியில், இலங்கை குப்பை, கழிவு பொருள்களை, கடலில் கொட்டுவதில் ஐந்தாம் இடத்தை வகிக்கின்றது. இவ்வாறான செயற்பாட்டை குறைக்கும் நோக்கில் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். மக்களை தொழில்நுட்பம் விதத்திலும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான உதவிப் பணிப்பாளர் திருநாவுக்கரசு ஸ்ரீபதி தெரிவித்தார்.

இலங்கையில் காணப்படும் மிக முக்கிய இடங்களான காலிமுகத்திடல் திருகோணமலை களுத்துறை, சுற்றுலாத் துறைக்கு பிரபல்யமான கடற்கரையோரங்களில் துப்புரவுபடுத்தி, பொதுமக்களுக்கு கடற்கரையில் காணப்படுகின்ற கடற்கரையில் போடப்படுகின்ற உப்பை களை எவ்வாறு தடுக்க வேண்டும் இதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் குப்பைகள் போடுவதினால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .