Thipaan / 2016 ஜூலை 04 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கடலில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய சிறுவன், காப்பாற்றப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (03) பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு நீரில் மூழ்கியவர், திருகோணமலை-மனையாவெளி பகுதியைச்சேர்ந்த கணேஷ் பிரேம்குமார் (11 வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த சிறுவன், விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) தனது பாடசாலையில் கல்வி கற்று வறும் சக நண்பர்களுடன் வீட்டுக்கு அருகிலுள்ள கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளான்.
பந்தை எறிந்து பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது, ஆழமான பகுதிக்குச் சென்ற பந்தை எடுக்கச்சென்ற போதே, அவர் நீரில் மூழ்கியதாக ஆரம்ப விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சிறுவன், நீரில் மூழ்கியதைக் கண்ட சிலர், அவரைக் காப்பாற்றி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்;துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .