Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 22 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகப்பகுதில் ஏற்படும் கடல் அரிப்பை உடன் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாகாண சபை உறுப்பினர் தவம்கோரிக்கை விடுத்தார்.
ஆரம்பமான கிழக்கு மாகாண சபையின் 61ஆவது அமர்வு, நேற்று வியாழக்கிழமை (21) காலை இடம்பெற்றது.
அதில், விசேட பிரேரணையொன்றை சமரப்பித்து உரையாற்றி போதே, தவம் இக்கோரிக்கையை விடுத்தார். தவிசாளர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் நடைபெறற இவ்வமர்வில், இவ்விடயத்தை ஆதரித்து சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம்.நசிர், உதுமாலெப்பை, ஆரீப் சம்சுதீன் பொன்றோரும் ஆதரவாக உரையாற்றினர்.
முதலமைச்சர் அக்கறையுடன் செயற்பட்டு, இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்;குக் கொண்டு வந்து, மேலும் இதனால் பாதிக்கப்படவுள்ள நிந்தவூர் போன்ற கிராமங்களின் அழிவையும் தடுத்து நிறுத்துமாறும் இங்கு உரையாற்றிய பலரும் கோரிக்கை முன்வைத்தனர். இங்கு பாதிப்பு தொடர்பான படங்களையும் காண்பித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .