அப்துல்சலாம் யாசீம் / 2019 நவம்பர் 28 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடல் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தமொன்றில் மீனவர் ஒருவர், இன்று (28) காலை உயிரிழந்துள்ளார்.
சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயதுடைய டி.அகிலராஜ் எனும் மீனவரே உயிழந்துள்ளார் என்றும் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் இரவு மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று நேற்றுக் காலை வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கடல் கொந்தளிப்பு அதிகளவில் காணப்பட்டதால், படகு கவிழ்ந்துள்ளது.
இதனையடுத்து, மற்றைய படகுக்கு பாய்ந்த வேளை அவர் தவறிக் கீழே விழுந்ததாகவும் அப்பபோது படகில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜின் வெட்டியதால் இவ்வனர்த்தம் இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
8 minute ago
11 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
11 minute ago
12 minute ago