2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கடல் மட்டிகளை சேகரித்த இளைஞனின் சடலம் மீட்பு

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 24 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள கடலிலிருந்து, இன்று (24) காலை இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸ் தெரிவித்தனர்.

மேற்படி கடலில், நேற்று (23) கடல் மட்டிகளை சேகரித்துக்கொண்டிருந்த நிலையில், நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த இளைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும்  பொலிஸ் தெரிவித்தனர்.

மூதூர், ஹபீப் நகர் பகுதியைச் சேர்ந்த பி.திலகரட்ணம் என்ற 22 வயது இளைஞனே, இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொதுமக்களுடன் பெரும் பிரயத்தனத்துடன் மேற்கொண்டு வந்த நிலையிலேயே, சடலம் மீட்கப்பட்டுள்ளதென, மூதூர் பொலிஸ் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X